• Sun. Nov 29th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

சாலை விபத்தில் இறக்கும் அழிவின் விளிம்பு நிலையில் உள்ள சாம்பல் நிற தேவாங்குகள்!!

ByKalamegam Viswanathan

Nov 29, 2026

மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் பட்டூர் ஊராட்சி முத்துப்பட்டியில் நேற்று 28.11.2026 மேலூர் முதல் நத்தம் செல்லும் நெடுஞ்சாலையை கடக்கும் பொழுது அழிவின் விளிம்பு நிலையில் உள்ள சாம்பல் நிற தேவாங்கு வாகன விபத்தில் இறந்துள்ளது.

ஏற்கனவே மேலூர் முதல் நத்தம் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள கேசம்பட்டி,சேக்கிபட்டி,பட்டூர், மேலவளவு, ஊராட்சிகளில் சமநிலைக்காடுகளில் இருந்து இரவு நேரங்களில் பூச்சிகளை உண்ணுவதற்கு விவசாய நிலங்களுக்கு செல்லுவதற்கு இந்த சாலையை அழிவின் விளிம்பு நிலையில் உள்ள சாம்பல் நிற தேவாங்குகள் கடக்கும் பொழுது வாகன விபத்தில் இறந்துள்ளன.

இது பற்றி நாம் தொடர்ச்சியாக ஆவணப்படுத்தியும் கோரிக்கையும் வைத்ததால் கடந்த ஓர் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு வனத்துறையால் கேசம்பட்டியில் தேவாங்கு படம் பொறித்த இரண்டு எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது.
அதற்குப் பின்பு சின்னக்கற்பூரம்பட்டியில் நெடுஞ்சாலையின் இருபுறமும் இருக்கும் புளிய மரத்தில் ஏணி போன்று இருக்கும் வலையை வடிவமைத்து இணைத்து தேவாங்கு சாலையை கடப்பதற்கு இரண்டு இடங்களில் கட்டப்பட்டது.

இந்த இடங்களில் மின்கம்பங்களில் மோதும் மரங்களின் கிளைகள் வெட்டப்பட்டது.
இது ஒரு புறம் இருக்க தொடர்ச்சியாக இந்தப் பகுதியில் அழிவின் விளிம்பு நிலையில் உள்ள சாம்பல் நிற தேவாங்குகள் இறப்பது சூழலியலுக்கு எதிராக மாறிவிடும்.
எனவே மேலூர் முதல் நத்தம் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள மேலவளவு,பட்டூர்,கேசம்பட்டி,சேக்கிபட்டி ஆகிய ஊராட்சிகளில் அழிவின் விளிம்பு நிலையில் உள்ள சாம்பல் நிற தேவங்கு படம் பொறித்த எச்சரிக்கை பலகையை இரவு நேரங்களில் ஒளி எதிரொலிக்கும் வண்ணத்தில் வைக்க வேண்டும்.

வாகனத்தை மெதுவான வேகத்தில் இயக்குவதற்கு பொதுமக்களிடம் விழிப்புணர்வு செய்ய வேண்டும். இந்த நடவடிக்கையை தமிழ்நாடு வனத்துறை அமைச்சரும்,மாவட்ட வனத்துறை அலுவலர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சூழலியல் செயற்பாட்டாளர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்!