• Mon. Mar 16th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

ஆர்.எஸ் எஸ் கோட்டையில் பாஜக படுதோல்வி

ByA.Tamilselvan

Oct 16, 2022

ஆர்எஸ்எஸ் தலைமையகம் அமைந்துள்ள மகாராஷ்டிரா பஞ்சாயத்து தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது.
பாஜகவின் சித்தாந்த அமைப்பான ஆர்.எஸ்.எஸ் தலைமையகம் மகாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு சமீபத்தில் நடந்த பஞ்சாயத்து தேர்தலில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் படுதோல்வி அடைந்துள்ளது. அதேசமயம் இந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 13 பஞ்சாயத்து தலைவர் இடங்களில் 9 இடங்களை காங்கிரஸ் பிடித்துள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.