• Wed. Nov 18th, 2026

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் உசிலம்பட்டியில் ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா ஆய்வு..,

ByP.Thangapandi

Nov 18, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா நேரில் ஆய்வு செய்தார்., வாலாந்தூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வில், விவசாயிகளுக்கு பிஎம்.கிசான் திட்டத்தின் கீழ் பயனாளர் அடையாள அட்டை வழங்குவது குறித்து வேளாண்துறை அலுவலர்களிடம் ஆய்வு செய்தார்.,

தொடர்ந்து உசிலம்பட்டி எம்எல்ஏ விஜய் வேண்டுகோளுக்கிணங்க உசிலம்பட்டி கண்மாயை பகுதியை நேரில் ஆய்வு செய்த ஆட்சியர், கண்மாயை தூர்வாரவும், பூங்கா மற்றும் கண்மாய் கரையில் தார் சுற்றுச்சாலை அமைக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.,

தொடர்ந்து மேக்கிலார்பட்டியில் புதிதாக அமைக்கப்பட்ட தார் சாலை, உசிலம்பட்டி நகர தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஆய்வு செய்தார்.,

தொடர்ந்து உசிலம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உசிலம்பட்டி வட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய குடிநீர், சுகாதாரம் மற்றும் சாலைப் பணிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும், தமிழ்நாடு அரசின் சேவைகள் உரிய பயனாளிகளைச் சென்றடைவதை உறுதி செய்வது குறித்தும் அனைத்துத் துறை அரசு அலுவலர்களுடன் மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, உசிலம்பட்டி சார் ஆட்சியர் உத்கர்ஷ்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது.,