• Sun. Aug 9th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

டாஸ்மாக்கில் தீபாவளி பண்டிகைக்கு ரூ.600 கோடிக்கு மது விற்க ஏற்பாடு

ByA.Tamilselvan

Oct 16, 2022

தீபாவளி பண்டிகைக்கு டாஸ்மாக்கில் ரூ600கோடிக்கு மது விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
தீபாவளி பண்டிகை அக்டோபர் 24-ந்தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாட்களான சனிக்கிழமை 22-ந்தேதி ரூ.200 கோடி, 23-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை ரூ.200 கோடி, தீபாவளி பண்டிகை என்று ரூ.200 கோடி என்ற அளவில் மது விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக டாஸ்மாக் கடைகளில் 10 நாட்களுக்கு தேவையான மதுபானங்கள், 40 சதவீதம் சாதாரண ரகம் மதுபானங்கள், 40 சதவீதம் நடுத்தர ரக மதுபானங்கள், 20 சதவீதம் உயர்தர மதுபானங்கள் என்று கடைகளில் இருப்பு வைத்திருக்க வேண்டும் என்று வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மதுபானங்கள் குறைவாக விற்பனையாகும் மாவட்டங்களில் அதற்கான காரணங்களை கண்டறிய மண்டல மேலாளர்கள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.