• Sat. Oct 17th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

நாளை அ.தி.மு.க. 51-வது ஆண்டு தொடக்க விழா

ByA.Tamilselvan

Oct 16, 2022

அ.தி.மு.க. 51-வது ஆண்டில் நாளை அடியெடுத்து வைக்கிறது இதை முன்னிட்டு அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்துகிறார்.
நாளை அதிமுக 51 வது ஆண்டிலில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகம் மின்னொளியில் ஜொலிக்கிறது. நாளை காலை 9 மணிக்கு அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அலுவலகம் வருகிறார். அவருக்கு ஆதிராஜாராம், சத்யா உள்ளிட்ட மாவட்ட செயலாளர்கள், தொண்டர்களுடன் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு கொடுக்கிறார்கள். மேள தாளம் முழங்க வரவேற்பு கொடுக்கப்படுகிறது.
அப்போது எடப்பாடி பழனிசாமி தலைமை கழக வளாகத்தில் உள்ள கட்சியின் நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி ஜெயலலிதா ஆகியோரது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அ.தி.மு.க. கொடியை ஏற்றி வைக்கிறார்.