• Fri. Aug 14th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

நாகர்கோவிலில் மதுவிற்ற 4 பேர் கைது:109 பாட்டில்கள் பறிமுதல்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, குமரி மாவட்டத்தில் நேற்று டாஸ்மாக் கடைகளை மூட அரசு உத்தரவிட்டது. இதனால் முன்கூட்டியே மதுபாட்டில்களை வாங்கி விற்பனை செய்பவர்களை கைது செய்யுமாறு எஸ்.பி பத்ரி நாராயணன் உத்தரவிட்டார். அதன்பேரில் குமரி மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

நாகர்கோவில் பகுதியில் கோட்டார், வடசேரி, நேசமணிநகர் மற்றும் ஆசாரிபள்ளம் ஆகிய 4 போலீஸ் நிலையங்களுக்கும் உட்பட்ட பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தியதில் பழனி தெருவை சேர்ந்த ஏசுபால் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து81 மதுபாட்டில்களையும், கேசவதிருப்பாபுரம் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்த பூதலிங்கம் என்பவரிடம் இருந்து 21 மதுபாட்டில்களும், பள்ளவிளைை சேர்ந்த கண்ணன் என்வரிடம் இருந்து 3 மதுபாட்டிலும் கேசவபுத்தன்துறையை சேர்ந்த சகாய அபியாஷ் நோபில் என நாகர்கோவிலில் நேற்று ஒரே நாளில் மட்டும் மதுபாட்டில்கள் விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து மொத்தம் 109 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.