• Fri. Aug 14th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

கோவையில் சுற்றுலா துறை குறித்து சர்வதேச மாநாடு 2026..,

BySeenu

Aug 14, 2026

கோவையில் சுற்றுலா துறை குறித்து சர்வதேச மாநாடு 2026 நடைபெற்றது.

ஆகஸ்ட் 12 முதல் 15-ம் தேதி வரை நடைபெறும் தேசிய மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலா துறையை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்

ஸ்கால் இன்டர்நேஷனல் கோயம்புத்தூர் சார்பில், சுற்றுலாத் துறையினரின் தேசிய மாநாடான ஸ்கால் இந்தியா தேசிய மாநாடு 2026 தொடங்கியது. ஆகஸ்ட் 12 முதல் 15-ம் தேதி வரை கோவை லீ மெரிடியன் ஹோட்டலில் நடைபெறும் இம்மாநாட்டில் இந்தியா முழுவதும் உள்ள சுற்றுலாத் துறை சார்ந்தோர் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

நிகழ்ச்சியினை அமைச்சர் சம்பத் குமார், அமைச்சர்ராஜேஷ் குமார், குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தனர்.

நிகழ்ச்சியில் ஸ்கால் இன்டர்நேஷனல் இந்தியாவின் தலைவர் சஞ்சீவ் மெஹ்ரா, ஜிடி குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ஜி.டி. ராஜ்குமார், ஸ்கால் இன்டர்நேஷனலின் 2027ஆம் ஆண்டிற்கான தலைவராகத் தேர்வான என்.எஸ்.என். மோகன், தென்னிந்திய ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் சங்கத்தின் (SIHRA) செயல்பாட்டு இயக்குநர் சுந்தர் சிங்காரம், பியூச்சர் கேமிங் & ஹோட்டல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பிரதிநிதி, ஸ்ரீ ராமகிருஷ்ணா சுகாதார மற்றும் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் ராமகிருஷ்ணன், கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் SINC-2026 செயலாளர் கே. முத்துக்குமார் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

கோவையில் முதல்முறையாக இந்த தேசிய மாநாடு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. நான்கு நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஸ்கால் உறுப்பினர்கள், சுற்றுலாத் துறை வல்லுநர்கள் மற்றும் தொழில்துறை சார்ந்த முக்கியப் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

சுற்றுலாத் துறையின் எதிர்காலம், புதிய வாய்ப்புகள், தொழில் உறவுகள் மற்றும் கருத்துப் பரிமாற்றம் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.