• Fri. Sep 11th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ஏழாயிரம் பண்ணையில் ஆசிரியர் ஜேசுராஜா நினைவாக மினி மாரத்தான் போட்டி..,

ByK Kaliraj

Aug 14, 2026

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஏழாயிரம் பண்ணையில் உள்ள நாடார் மகமை மேல்நிலைப் பள்ளியில் குழந்தை பருவ புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆசிரியர் ஜேசுராஜ் அவர்களின் குடும்பத்தார் சார்பில் இரண்டாம் ஆண்டு மினி மரத்தான் போட்டி 16 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு 1500 மாணவியர்களுக்கு 3000 மீட்டர் போட்டியும் நடத்தப்பட்டது.

இதில் சங்கரபாண்டியாபுரம், முத்தாண்டியாபுரம், ஒத்தையால், மேட்டுப்பட்டி, ஏழாயிரம் பண்ணை, சுப்பையாபுரம் அச்சங்குளம், உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டனர்.

கலந்து கொண்ட அனைவருக்கும் டி சர்ட் இலவசமாக வழங்கப்பட்டது

முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத் தொகையும் கலந்து கொண்ட அனைவருக்கும் பதக்கங்களும் வழங்கப்பட்டன.