• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ஊழல் நிறைந்த அரசாக கர்நாடகா உள்ளது- ராகுல் காந்தி

ByA.Tamilselvan

Oct 4, 2022

கர்நாடகாவில் தனது நடைபயணத்தை மேற்கொள்ளும் ராகுல்காந்தி அங்கு பேசியபோது இந்தியாவிலேயே அதிக ஊழல் நிறைந்த அரசாக கர்நாடக அரசு உள்ளது என குற்றம் சாட்டினார்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயண பாத யாத்திரையை கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்திற்குள் நுழைந்துள்ளது. இன்று மாலை பாண்டவர் புரத்தில் அவரது நடைபயணம் நிறைவடைந்தது. அங்கு பேசிய ராகுல்காந்தி, நாட்டிலேயே அதிக ஊழல் நிறைந்த அரசாக கர்நாடகா பாஜக அரசு உள்ளது என்றார். சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையினரிடம் இந்த அரசு 40% கமிஷன் வசூலிக்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார். இது குறித்து கர்நாடக ஒப்பந்ததாரர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதாகவும்,ஆனால் பிரதமர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.