• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

த. வெ.க நிர்வாகியுடன் வந்தால் முக்கியத்துவம் கொடுக்கும் உத்தமபாளையம் பேரூராட்சி !

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா உத்தமபாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் பணி செய்யும் செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் யார் வந்து மனு கொடுக்க வந்தாலும் எந்த ஒரு தகவலும் கேட்காமல் காக்க வைக்கும் அவல நிலை இன்று ஒரு பெண் முதியவர் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நின்று கொண்டிருந்தார்.

அவரிடம் எந்த ஒரு கருத்துக்களையும் கேட்காமல் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மனு கொடுக்க வந்த நிலையில் அவர்களை அலுவலகத்தில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக அமர வைத்து பேசிக் கொண்டிருந்தார். ஆனால் அந்த வயது முதிர்ந்த பெண் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அலுவலகத்தின் வாசலிலேயே அதிகாரியை சந்திக்க காத்துக் கிடக்கும் அவல நிலையாக உள்ளது.

ஆனால் தமிழக வெற்றிக்காக நிர்வாகிகள் யாரை அழைத்து வந்து மனு கொடுக்க வந்தாலும் முக்கியத்துவம் கொடுக்கும் செயல் அலுவலர், ஆனால் பேரூராட்சி அலுவலகம் என்பது தங்களுடைய குறைகளை கூற வரும் பணக்காரர் முதல் பாமரமக்கள் என அனைவருக்கும் பொதுவான இடம் என்பது தான் வழக்கம். ஆனால் உத்தமபாளையம் பேரூராட்சியில் பணியாற்றுபவர்கள் ஆளுங்கட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக கூறி வருகிறார்கள். துறை சார்ந்த நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.