மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் அருகில் உள்ள சுகாதார வளாகம் முன்பு குப்பைகள் தேங்கி சுகாதார கேடு ஏற்படுவதாகவும் மற்றும் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதாகவும் ஆகையால் உடனடியாக குப்பைகளை அகற்ற வேண்டும் எனவும் சில மாதங்களுக்கு முன்பு இந்த பகுதிக்கு நன்றி சொல்ல வந்த கருப்பையா எம்எல்ஏவிடமும் இது குறித்து பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

உடனடியாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளர் ஆகியோரிடம் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க கோரி சட்டமன்ற உறுப்பினர் அறிவுறுத்தி சென்றார். இந்த நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு குப்பைகள் தேங்கி சுகாதாரத் ஏற்படுவதாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவி வைரலானது. இதனை அடுத்து வாடிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மன்னாடிமங்கலம் ஊராட்சி செயலாளர் ஆகியோர் கூடுதல் பணியாளர்களை கொண்டு சுகாதார வளாகம் முன்பு தேங்கிகிடந்த குப்பைகளை உடனடியாக போர்க்கால அடிப்படையில் அகற்றினர்.

இதனைத் தொடர்ந்து இந்த பகுதி பொதுமக்கள் தொற்று நோய் பரவும் அபாயத்திலிருந்து பாதுகாக்கப்பட்டதாக கூறி நடவடிக்கை எடுக்க உதவிய கருப்பையா எம்எல்ஏ மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு நன்றியை தெரிவித்ததுடன் உடனடி நடவடிக்கை எடுத்த வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி செயலாளர் ஆகியோருக்கும் நன்றியை தெரிவித்தனர்.




