• Fri. Oct 16th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

நாளை புதிய கட்சி குறித்து அறிவிக்கிறார் சந்திரசேகர ராவ்

ByA.Tamilselvan

Oct 4, 2022

தேசிய அரசியலில் குதிக்கும் நோக்கத்தோடு தொலுங்கான முதல்வர் சந்திரசேகரராவ் புதிய கட்சி குறித்த அறிவிப்பை நாளை வெளியிடுகிறார்.
தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியில் இருந்து வருகிறது. வரும் பாராளுமன்ற தேர்தலில் அக்கட்சி தேசிய அளவில் கால்பதிக்க விரும்புகிறது. மத்தியில் 2024-ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க. அல்லாத கூட்டணி ஆட்சிக்கு வந்தால், நாடு முழுவதும் இலவச மின்சாரம் வழங்கப்படும் என சந்திரசேகர ராவ்அறிவித்தார். கடந்த மாதம் 12-ம் தேதி சட்டசபையில் பேசிய சந்திரசேகர ராவ், தேசிய கட்சி தொடங்கப் போவதாக முதல் முதலில் அறிவித்தார். தேசிய அளவில் கால் பதிக்கும் நோக்கத்திலும், பா.ஜனதாவுக்கு எதிராக புதிய அணி உருவாக்கும் நோக்கத்திலும் சந்திரசேகர ராவ், பிற தலைவர்களை சந்திக்கத் தொடங்கினார். பீகார் மாநில முதல் மந்திரி நிதிஷ்குமாரை சந்தித்துப் பேசினார். இந்நிலையில், விஜயதசமி தினத்தன்று (நாளை) புதிய கட்சி தொடங்குவது பற்றி சந்திரசேகர ராவ் அறிவிப்பு வெளியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.