இந்த நூறு நாள் தவெக ஆட்சியில் கொந்தளித்து கிடைக்கிறது தென் தமிழ்நாடு .மதுரை உட்பட நான்கு மாவட்டங்களில் பணம் இரட்டிப்பு ஆக்கப்படும் என செயலி வழியாக முதலீடு செய்ய வைத்து பல கோடி ரூபாய் மோசடி தென்தமிழ்நாட்டில் பெரும் பதட்டத்தை உருவாக்கி உள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் அலைபேசியில் எப்.கியூ.எல்.மற்றும் விஜி செயலியில் ரூபாய் 53 ஆயிரம் முதலீடு செய்தால் 45 நாட்களில் பணம் இரட்டிப்பாக கிடைக்கும் என்ற வார்த்தையை நம்பி ஒவ்வொரு கிராமத்திலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஏன் ,ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் எல்லாம் மூளைசலவை செய்து பணத்தை முதலீடு செய்ய வைத்து தற்போது மிகப்பெரிய மோசடியை அரங்கேற்றி இருக்கிறார்கள்.
இதனால் மதுரை மட்டுமல்ல திண்டுக்கல் மாவட்டம் நத்தம், சிவகங்கை ,விருதுநகர் ஆகிய மாவட்டத்தில் பல பகுதிகளிலே கோடிக்கணக்கில் பண மோசடி நடந்துள்ளது .இது தொடர்பாக நேற்று வரை 30,000 மேற்பட்டவர்கள் புகார் மனு கொடுத்துள்ளார்கள்.மதுரை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் நேற்று 500க்கும் மேற்பட்டவர்கள் புகார் கொடுத்ததாக செய்திகள் வந்துள்ளது. இன்னும் எவ்வளவு பேர்கள் இதில் மோசடி செய்யப்பட்டு இருக்கிறார்கள் அதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது மிகப்பெரிய கவலை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

ஏற்கனவே மதுரையை தலைமையிடமாக கொண்டு இயங்கிய நியோ மேக்ஸ் நிறுவனத்தில் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் மோசடியில் இருந்து இந்த தென்தமிழ்நாடு மக்கள் மீள முடியாமல் பொருளாதாரத்தில் துவண்டு கிடக்கிறார்கள் .
தற்போது தவெக அரசு பொறுப்பேற்ற இந்த 100 நாட்களில் ஆன்லைன் வழியாக நான்கு மாவட்டங்களில் எப்.கியூ.எல்.மற்றும் விஜய் செயலி மோசடி தென் தமிழ்நாட்டில் ஒரு பெரும் பதட்டத்தை உருவாக்கியது.முதல்வர் கவனத்திற்கு நிச்சயமாக வந்திருக்கும் ஏனென்றால் மறியல், முற்றுகை போராட்டம், காவல் வாகனங்கள் தாக்குதல் என்று ஒரு போர்க்களமாகவே தென் தமிழ்நாடு பதட்டத்தில் இருக்கிறது.
இதனை தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே காசாம்பட்டியைச் சேர்ந்த 26 வயது இளைஞன் ராசு அப்பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் மாமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் . இதனை தொடர்ந்து அந்த பகுதி மக்கள் உரிய நீதி விசாரணை கேட்டு, மோசடியில் உயிரை பலி கொடுத்து இருக்கிற அந்த ராசுக்கு நீதி கேட்டு முற்றுகைப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இப்படி ஏறத்தாழ 1000 கோடிக்கு மேல் சுருட்டிய ஆன்லைன் மோசடி கும்பலால் மக்கள் மத்தியில் ஏற்படுகின்ற பதட்டத்தை தணிக்கவும், தொடர்ந்து இந்த உயிர் பலிகளை போர்க்கால அடிப்படையில் தடுத்து நிறுத்திடவும், முதல்வர் அக்கறை செலுத்துவாரா? என்பது தான் இப்போது மக்களுடைய கேள்வியாக இருக்கிறது.
வாக்களித்த மக்கள் இன்றைக்கு தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து, நடுத்தெருவில் மோசடி கும்பலின் சூழ்ச்சி வலையில் சிக்கி சின்னாபின்னமாகி ,தங்கள் எதிர்காலத்தையே இன்றைக்கு இழந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு ஆறுதல் கூறுகின்ற வகையில், அவர்களை பாதுகாக்கின்ற வகையில், உயிர் பலியை தடுத்து நிறுத்துகின்ற வகையில் ,இந்த அரசு நடவடிக்கை எடுப்பதற்கு இந்த மக்கள் எதிர்பார்த்து வீதியில் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் ஏறத்தாழ 10 தினங்களுக்கு மேலாக நடைபெறுகிற இந்த கலவரங்களுக்கு மத்தியில்,தவெக அரசின் சார்பில் எந்த விதமான பாதுகாப்பும் ,எந்த விதமான நடவடிக்கைகளும் முறையாக எடுக்கப்பட்டதா? என்றால் மிகப்பெரிய கேள்வி தான் எழுகிறது.
பல பேர் இன்றைக்கு தற்கொலை எண்ணத்தில், மன உளைச்சலில், மன அழுத்தத்தில், எதிர்காலமே சூனியம் ஆகிவிட்டதாக கருதி வேதனையில் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
சாமானிய மக்கள், ஏழை எளிய மக்களை இந்த மோசடியில் இருந்து காப்பாற்றுவதற்கு, அந்த மக்களின் கண்ணீரை துடைப்பதற்கு தேவைக்கு அரசு நடவடிக்கைகளை எடுக்குமா ?
இழந்த பணங்களை மீட்டு தருமா? ஏமாற்றம் அடைந்த அந்த மக்கள் நடுவீதியில் அழுது கொண்டிருக்கிறார்கள்.
இப்படி ஆசையை தூண்டி மக்களை ஏமாற்றுவது சமீப காலங்களில் ஆட்சிக்கும் அதுதான் அடித்தளமாக இருக்கிறது .இப்போது நடக்கிற இந்த மோசடிக்கும் அதுதான் அடித்தளமாக இருக்கிறது.
ஆகவே ஆசை பேராசை மக்களை நடுத்தெருவில் நிறுத்தி இருப்பதை நாம் காணுகிற போது நெஞ்சு பொறுக்கவில்லை . போர்க்கால நடவடிக்கை முதல்வர் விஜய் எடுப்பாரா? பொறுத்திருந்து பார்ப்போம் என கூறினார்.




