• Sat. Aug 15th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

பணக்காரர் பட்டியலில் கடந்தமாதம் 3ம் இடம். இந்த மாதம் 2ம் இடம் பிடித்த அதானி

ByA.Tamilselvan

Sep 16, 2022

உலக பணக்காரர்கள் பட்டியலில் கடந்த மாதம் 3ம் இடத்தில் இருந்த அதானி இந்தமாதம் 2ம் பிடித்துள்ளார்.
உலகளவில் பணக்காரர் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டது. இதில், அமேசான் அதிபர் ஜெஃப் பெசோஸ் மற்றும் லூயிஸ் உய்ட்டனின் பெர்னார்ட் அர்னால்ட் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி கௌதம் அதானி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
கடந்த மாதம் வெளியிடப்பட்ட உலக பணக்காரர் பட்டியலிலும் அதானி, அர்னால்ட்டை முந்தி மூன்றாவது இடத்தைப் பிடித்திருந்தார். ஆனால் ஜெஃப் பெசோஸ்க்கு அடுத்தபடியாக இருந்தார். அர்னால்டின் தற்போது மொத்த சொத்து மதிப்பு 153.5 பில்லியன் டாலர்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். அது இன்று 4.9 பில்லியன் டாலர் அல்லது 3.08 சதவீதம் சரிந்துள்ளது. அதே சமயம் பெசோஸ் 49.7 பில்லியன் டாலரில் இருந்து 2.3 பில்லியன் டாலர் சரிந்து நான்காவது இடத்தில் உள்ளார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி 92 பில்லியன் டாலர் மதிப்புடன் எட்டாவது இடத்தில் உள்ளார்.