• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தேர்தலை ஒன்று சேர்ந்து சந்திக்கலாம்- தினகரன் பேட்டி

ByA.Tamilselvan

Aug 29, 2022

வரும் நாடாளுமன்ற தேர்தலை அனைவரும் ஒன்று சேர்ந்து சந்திக்கலாம் என அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு பேட்டி,
அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தஞ்சாவூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறி வருகிறார். அது சரியான கருத்தாகும். அவரவர் அவரவராக இணைந்து தி.மு‌.க என்ற தீய சக்தியை ஆட்சிப் பொறுப்பில் இருந்து அகற்றி விடுவதற்கு எது சரியான வழியோ அதை செயல்படுத்துவோம். நேற்று வரை நடந்ததை மறந்து விட்டு எல்லாம் நல்லதற்கே, நல்லது நடக்கும் என்ற எண்ணத்தில் செயல்பட வேண்டும். அவரவர் அவரவராக இருந்து செயல்பட வேண்டும் என்பதை தான் நான் அனைவருக்கும் கூறுகிறேன்.யாரும் யாருடனும் இணைய வேண்டாம். அனைவரும் இணக்கமாக இருந்து செயல்பட வேண்டும். தேர்தலை ஒன்று சேர்ந்து சந்திக்கலாம். அதிகம் பாதிக்கப்பட்ட நாங்களே பெருந்தன்மையாக எடுத்துக் கொள்ளும் நிலையில் அவர்கள் பழையதையே நினைத்துக் கொண்டிருக்க கூடாது. பாராளுமன்ற தேர்தலில் அனைவரும் ஒன்று இணைந்து தேர்தலை சந்திக்கலாம்.