புதுக்கோட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் முகமது பர்வேஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில் தொழிலாளர் நலத்துறை சார்பில் பட்ஜெட்டின் மானிய கோரிக்கையில் அதிக திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஐடிஐ மாணவர்களுக்கு தங்குமிடம் மட்டுமல்லாது அவர்கள் திறனை மேம்படுத்துவதற்காக திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

தொழிலாளர் நலத்துறை சார்பில் 15 திட்டங்கள் தொழிலாளர் நலனுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமில்லாமல் தேவையான கோரிக்கைகள் பெறப்பட்டு அந்த திட்டங்களும் நிறைவேற்றப்படும்.
மேலும் சிறப்பான திட்டங்கள் இந்த துறையில் விரைவில் அறிவிக்கப்பட்டு தொடங்கப்படும் இ எஸ் ஐ எல் புதிய திட்டங்கள் இந்த மானிய கோரிக்கை அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
தொழிலாளர்களுக்கு தங்குமிடம் ஏற்படுவதற்கு அறிவிக்கப்பட்டுள்ளது

கடந்த காலங்களில் சட்டசபை நிகழ்வுகள் ஆளுங்கட்சி என்ன தருகிறார்களோ அதை தான் ஒளிபரப்பாகி வந்த நிலையில் தற்போது நேரலையில் சட்டசபை நிகழ்வுகள் ஒளிபரப்பப்படுகிறது. இதனால் யார் என்ன தவறு செய்கிறார்கள் எவர் பிரச்சனை செய்கிறார்கள் என்பது மக்களுக்கு நன்றாக தெரிந்து விடுகிறது.
எதிர்க்கட்சிகள் கேட்கும் கேள்விகளுக்கு தகுந்த பதில்களை ஆளும் தரப்பிலிருந்து தரப்பட்டு வருகிறது.
ஐடிஐ படிப்பில் சேர்வதற்கு மாணவர்களின் ஆர்வத்தை பொறுத்து சேர்க்கை அறிவிப்பு மாற்றப்படும்.

சட்டசபையில் எதிர்க்கட்சிகள் தான் பிரச்சனை செய்கிறது ஆளும் கட்சி எதற்காக நாங்கள் பிரச்சனை செய்ய போகிறோம்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கண்பார்வை தொடர்பாக மருத்துவரிடம் பரிசோதனை செய்தபோது மருத்துவர் ஆலோசனைப்படி பவர் கண்ணாடி போட்டு உள்ளேன் அதை ஒரு சில பேர் கேமரா வைத்து ஏயை தொழில்நுட்ப கண்ணாடி என்று கூறுகின்றனர் சட்டசபை நிகழ்வுகளை நாங்கள் நேரடியாக ஒளிபரப்பும் போது நான் ஏன் சட்டசபைக்குள் கேமரா வைத்து ரெக்கார்ட் செய்யப் போகிறேன் எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே திட்டமிட்டு இது தொடர்பாக அவதூறு பரப்புகின்றனர்.
இதனை கிளப்பி விட்டார்கள் நம்பாவிட்டாலும் பரவாயில்லை மக்கள் நான் கூறிய விளக்கத்தை நம்புகின்றனர்.
முதல்வர் வரும் திங்கள்கிழமை அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கிறேன் என்று கூறியுள்ளார்.








