• Sun. Jul 12th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

சுதந்திர தினம் கொண்டாடிய பறவை வைரல் வீடியோ

ByA.Tamilselvan

Aug 15, 2022

நாடு முழுவதும் 75 வது சுதந்திரதினம் கொண்டாடும் நேரத்தில் பறவை ஒன்று தேசிய கொடியை காலில் கட்டியபடியே பறக்கும் வைரல் வீடியோ வெளியாகி உள்ளது.
இன்று நாடு முழுவதும் கோலாகலமாக சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. எங்கு பார்த்தாலும் மூவர்ணக்கொடி பட்டொளி வீசி பறக்கிறது. இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை ஒவ்வொரு இந்தியரும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

நம்மோடு இணைந்து பறவையும் சுதந்திரதினம் கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது. மூவர்ணக்கொடியை காலில் கட்டிக்கொண்டு வானில் பறக்கும் பறவையின் வீடியோவை தங்களது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து இதுதான் சுதந்திர பறவை என பலரும் பதிவிட்டு வருகின்றனர்