• Tue. Oct 13th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் சா.அருணன் கோரிக்கை..,

ByKalamegam Viswanathan

Oct 13, 2026

இன்று சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு ஆ.ராஜ்மோகன் தலைமையில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடைப்பெற்றது.

கூட்டத்திற்கு பிறகு 2026 – 2027 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட வார காலவேலை அட்டவனையை வெளியிட்டார். 1ஆம் வகுப்புமுதல் 12ஆம் வகுப்புவரை காலை 9.30 மணி முதல் மாலை 4.10 மணி வரை வேலை நேரமாகவும் இருக்கும் என்றும் மாணவர்கள் கல்வியில் மட்டும் சிறந்தவர்களாக இருந்தால் போதாதது பிற திறனிலும் சாதிக்க வேண்டும் என்பதற்காக உடற்கல்விக்கு ஏற்கனவே வாரத்தில் இரண்டு பாடவேலையாக இருந்ததை மூன்று பாடவேலையாக அறிவித்திருப்பது பள்ளி பருவத்திலேயே மாணவர்கள் தன் உடற்கட்டமைப்பிலும் விலையாட்டிலும் தன்னை மேம்டுத்தி மாவட்டம் மாநில , சர்வதேச அளவில் பல பதக்கங்களை பெற்று நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற உன்னத முயற்சியாக கருதுகிறோம்.

மேலும் கலை, இசை , இயற்கை நுண்ணறிவை உள்ளிட்ட பொது அறிவு சிந்தனையை மேம்படுத்தவும் விதமாக தனி பாடவேலையை உருவாக்கி அறிவித்திருப்பதை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வரவேற்க்கும் அதே நேரத்துல் பல பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் காலியாகவே உள்ளது ஆசிரியர் பணியிடத்தை உடனே நிரப்ப வேண்டும்.

அதே போன்று ஓவிய ஆசிரியர் , இசை ஆசியர்கள் உள்ளிட்ட பிற ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளது அதனை உடனே நிரப்பவேண்டும் மேலும் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளி வேலை நேரம் காலை 9.30 மணி முதல் 4.10 மணி வரை என்று அறிவித்திருப்பதையும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வரவேற்கிறோம்.