• Tue. Oct 13th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

அலுமினிய பவுடரில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக திடீர் வெடி விபத்து..!

ByK Kaliraj

Oct 13, 2026

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஒன்றியம் வன மூர்த்தி லிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் (வயது 55 ) என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை கங்கர் சேவல் கிராமத்தில் செயல்பட்டு வருகிறது.

நாக்பூர் உரிமம் பெற்று செயல்பட்டு வரும் இந்த பட்டாசு தொழிற்சாலையில் 30க்கும் மேற்பட்ட அறைகளில் 60க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வழக்கம் போல் நேற்று தீபாவளிக்கு தேவையான பட்டாசுகள் தயாரிக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

இந்தநிலையில் பட்டாசுகள் தயாரிக்க மருந்துகள் வைக்கும் அறையில் அலுமினிய பவுடர் டின்கள் இறக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அலுமினிய பவுடரில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக திடீர் வெடி விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.
இதில் லோடு ஏற்றி வந்த வாகனம் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. அலுமினிய பவுடர் லோடு இறக்கிய சிவகாசி அருகே உள்ள நாரணாபுரம் புதூர் கிராமத்தைச் சேர்ந்த புலித்துரை (வயது 36) என்பவர் படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனை தீவிர தீக் காய சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த வெடி விபத்து தகவல் அறிந்த வெம்பக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் அழகுசாமி தலைமையில் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.இந்த விபத்தில் ஆலையில் உள்ள ஒரு அறை மட்டும் தரைமட்டமானது.
விபத்து நடந்த இடத்தை சாத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு குருசாமி வெம்பக்கோட்டை தாசில்தார் ஆனந்தராஜ் வெம்பக்கோட்டை இன்ஸ்பெக்டர் கமல் ஆகியோர் பார்வையிட்டனர் தொடர்ந்து காங்கிரஸ்வல் கிராம நிர்வாக அலுவலர் பாலாஜி கொடுத்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் வழக்கு பதிவு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.