மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலூகா அலுவலகத்தில் மாதந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தாசில் தார் சுந்தரவேல் தலைமை தாங்கினார்.

மண்டல துணை தாசில்தார் மவுண்ட் பேட்டன், வேளாண்மை உதவி இயக்குனர் பாண்டி,பொறியாளர் மொக்க மாயன், நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளர் ராதா முத்துக்குமாரி, பொதுப்பணித்துறை உதவி பொறியா ளர்மொக்க மாயன், பாசன ஆய்வாளர்கள் முகமது சுல்தான், பிரதீப், குமரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் ராஜா வரவேற்றார். இந்த கூட்டத்தில் பருவமழை தொடங்கு வதற்கு முன்பாககண்வாய் ஏரி குளங்களை தூர்வாரி கரைகளை சீரமைத்தும், வரத்து கால்வாய் தண்ணீர் வெளியேறும் கால்வாய்களில் அடர்ந்து வளர்ந்த சீம கருவேலை மரங்கள் மற்றும் மரம் செடி கொடிகளை அகற்றி விட வேண்டும்.

பெரியாறு பாசன கால்வாய் சிலப்பு கள் மற்றும் சட்டங்களை சீரமைக்க வேண்டும்.தொடர் விபத்துக்களை ஏற்படுத்தி வரும் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளங்களை நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக மூட வேண்டும். விராலிப்பட்டி, செம்மினி பட்டி பகுதியில் தென்னந்தோப்புகளில் தொடர்ந்து மோட்டார் சைக்கிள் வந்து இளநீர் திருடும் போதை ஆசாமிகள் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையில் சம்பந்தமாக மனுக்கள் கொடுத்து விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் மற்றும் கவுன்சிலர் அசோக்குமார், காரைக்குடி சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி கிராம தங்கல் திட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் உழவர் உற்பத்தியாளர் குழு தலைவர் ஜெயரட்சகன் நன்றி கூறினார்.




