• Sat. Sep 19th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

அழகிரிக்கு அல்லு கெளம்புதே ஏன் தெரியுமா?.. எகிறும் எச்.ராஜா!

புதிய ஆளுநர் வருகைக்கு கே.எஸ். அழகிரி அலறுவதற்கு காரணம் என்ன தெரியுமா? என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜா பேசியதாவது: பிற்படுத்தப்பட்ட மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு அகில இந்திய அளவில் 27 சதவீதம் ஒதுக்கிய மோடி பிறந்த செப்டம்பர் 17ம் தேதிதான் உண்மையான சமூகநீதி நாள் என்று கூறினார். மேலும், தமிழகத்தில் ஆளுநராக சிறப்பாக செயல்பட்ட பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநிலத்திற்கு மாற்றப்பட்டு, தற்போது புதிய ஆளுநராக முன்னாள் காவல்துறை அதிகாரியாகவும், உளவத்துறையில் சிறப்பாக பணியாற்றிய ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ளதை தமிழக முதல்வரே வரவேற்றுள்ளார். ஆனால் திருடனுக்கு தேள் கொட்டியது போல் ஆளுநர் மாற்றத்திற்கு  காங்கிரஸ் தலைவர் அழகிரி அலறுகிறார். ஏன் என்று  தெரியவில்லை. ஒரு வேலை இவர் ஏதேனும் கல்லூரியில் ஊழல் செய்திருப்பாரோ. ஆளுநர் மாற்றம் எங்கோ நெறி கட்டுகிறது  எனக்கூறியுள்ளார்.