• Mon. May 4th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

“பிரின்ஸ்” என்று பெயரிட்டுள்ள சிவகார்த்திகேயனின் புதியப்படம்…

ByA.Tamilselvan

Jun 10, 2022

சிவகார்த்திகேயன் நடித்து வெளியாகிய டாக்டர், டான் ஆகிய 2 படங்களும் பாக்ஸ் ஆபிஸில் ரூபாய் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் மக்கள் மத்தியில் இந்த இருத்திரைப்படங்களும் பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து தெலுங்கு இயக்குனரான அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் எஸ்.கே.20 திரைப்படத்தில் நடித்து வருகிறார். தமன் இசை அமைக்கும் இந்த படத்திற்கு மனோஷ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தில் உக்ரைன் நடிகை மரியா, சத்யராஜ் போன்றோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இத்திரைப்படம் ஆகஸ்ட் 31ஆம் தேதி விநாயகர் சதூர்த்தியன்று வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ள சூழ்நிலையில், படத்தின் புது அப்டேட் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இப்படத்திற்கு “பிரின்ஸ்” என்று பெயர் வைத்துள்ள படக்குழு, படத்தின் பெயரோடு சேர்த்து பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.