• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

இலங்கை தமிழர்களுக்கு நிவாரண நிதி வழங்கிய யாசகர்..!

Byவிஷா

May 16, 2022

பொதுமக்களிடம் யாசகம் பெற்ற ரூ.10 ஆயிரத்தை இலங்கை தமிழர்களுக்கு நிவாரண நிதியாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் யாசகர் வழங்கினார்.

இலங்கை தமிழர்களுக்கு தங்களால் ஆன உதவியை செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்ததையடுத்து, தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறைச் சேர்ந்த யாசகர் பூல்பாண்டி என்பவர் பொதுமக்களிடம் யாசகம் பெற்ற 10 ஆயிரம் ரூபாயை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகனை நேரில் சந்தித்து இலங்கை தமிழர் நிவாரண நிதியாக வழங்கினார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு இலங்கை தமிழர் நிவாரண நிதியாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் ரூபாய் 50,000 வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.