• Mon. Sep 28th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

மீண்டும் இணையும் சூரரைப் போற்று காம்போ!

இயக்குனர் சுதா கொங்கரா-வுடன் சூர்யா-வின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு இந்த ஆண்டு வெளிவரும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் நல்ல வரவேற்ப்பையும் வசூலையும் பெற்றது. இந்த கூட்டணி மீண்டும் இணையப்போவதாக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு சமூக வலைதளத்தில் நேரடியாக பதிலளித்த ஜி.வி.பிரகாஷ், சுதா கொங்கரா -சூர்யா கூட்டணியின் அடுத்த படம் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிவித்தார். இது குறித்த அறிவிப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார். சூரரைப் போற்று படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.