குழந்தைத்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் ஜெனிலியா, மீண்டும் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுக்க உள்ளார்.
தமிழில் பாய்ஸ் படம் மூலமான அறிமுகமான ஜெனிலியா. தொடர்ட்னது சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம், வேலாயுதம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். பின் பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். திருமணத்திற்கு பிறகு நடிப்பதிலிருந்து விலகி இருந்த ஜெனிலியா, தனது கணவருடன் ஒரு இந்தி படத்திலும், ஒரு மராத்தி படத்திலும் நடித்திருந்தார்.
இந்நிலையில்,ஜெனிலியா தெலுங்கு திரைப்படம் ஒன்றில் கமிட்டாகி உள்ளார். இப்படத்திற்கான பூஜையில் பேசிய ஜெனிலியா ,திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தேன். கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேல் திரைப்படங்களில் நடிக்கவில்லை. இப்போது நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார். இப்படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.