• Thu. Mar 12th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

முதல் பாகத்துல பிரியாணி! – இரண்டாம் பாகத்துல? – உருவாகிறதா கைதி 2..?!

கைதி படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு நடிகர் கார்த்தி நடித்த கைதி திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கைதி படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, கைதி திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது நடிகர் கமலஹாசனை வைத்து விக்ரம் திரைப்படத்தை இயக்கி வருகிறார். அதேபோல் நடிகர் கார்த்தி விருமன் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் இந்த திரைப்படங்களை முடித்த பிறகு இருவரும் இணைந்து கைதி இரண்டாம் பாகம் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.