

ரஜினி மற்றும் விஜய் ரசிகர்களுக்கு பிப்ரவரி 10ம் தேதியான நாளை டபுள் ட்ரீட் தர சன் பிக்சர்ஸ் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் சோஷியல் மீடியாவை தெறிக்கவிட்டு வருகின்றனர்!
சன் பிக்சர்ஸ் அடுத்தடுத்து டாப் ஹீரோக்களின் படங்களை தயாரித்து வருகிறது. ரஜினியின் அண்ணாத்த படத்தை தொடர்ந்து சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், விஜய்யின் பீஸ்ட் என வரிசையாக அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களை தயாரித்து வருகிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தியேட்டரில் ரிலீசாக போகும் சூர்யா படம் என்பதால் எதற்கும் துணிந்தவன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படம் மார்ச் 10 ம் தேதி தியேட்டர்களில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு விட்டது. இதனால் சன் பிக்சர்ஸ் அடுத்து இயக்கி வரும் விஜய்யின் பீஸ்ட் படம் பற்றி ரசிகர்கள் தொடர்ந்து அப்டேட் கேட்க துவங்கி விட்டனர்.
இந்நிலையில் பீஸ்ட் படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் பிப்ரவரி 14 ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக ஸ்பெஷல், மாஸ் வீடியோவுடன் இரண்டு நாட்களுக்கு முன் அறிவிப்பு வெளியிட்டது சன் பிக்சர்ஸ். இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக, அரபிக் குத்து பாடலின் செகண்ட் ப்ரோமோ வீடியோவை பிப்ரவரி 10 ம் தேதி வெளியிட சன் பிக்சர்ஸ் முடிவு செய்திருக்கிறதாம். முதல் ப்ரோமோவில், நாளை முழு பாட்டோடு வீட்டுக்கு வாங்க என விஜய் பேசுவதை போல் அமைக்கப்பட்டிருந்தது. அதனால் இரண்டாவது ப்ரோமோவில் அனிருத், நெல்சன், சிவகார்த்திகேயனுடன் விஜய்யும் இருப்பார். ஃபஸ்ட் சிங்கிளான அரபிக்குத்து பாடலை விஜய் தனது சொந்த குரலில் பாடுவது போல் ப்ரோமோ அமைக்கப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.
பிப்ரவரி 10 ம் தேதி வெளியாக உள்ள முதல் ட்ரீட், அரபிக்குத்து பாடலுக்கான இரண்டாவது ப்ரோமோ என்றால், இரண்டாவது ட்ரீட் அதை விட செமயாக உள்ளது. ரஜினியின் அடுத்த படமான தலைவர் 169 படத்தை டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்க போவதாக சமீபத்தில் தகவல் வெளியானது. தலைவர் 169 படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் நாளை வெளியிட சன் பிக்சர்ஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் வெளியானதும், இது என்ன செம சர்ப்ரைஸ் ட்ரீட்டா இருக்கே என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
