• Thu. Apr 18th, 2024

ஆஸ்கார் ரேசில் உள்ள 10 படங்கள்.. முந்த போவது யார்?

உலக அளவில் வழங்கப்படும் திரைப்பட விருதுகளில் முதன்மை விருதாகக் கருதப்படுவது அமெரிக்காவில் வழங்கப்படும் ஆஸ்கர் விருது.

இந்த வருடத்திற்கான 94வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா மார்ச் 27ம் தேதி நடைபெற உள்ளது. விருதுகளுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள படங்கள், நட்சத்திரங்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோரது கடைசி கட்ட நாமினேஷன் பட்டியல் நேற்று மாலை 6.30 மணிக்கு ஆஸ்கரின் அதிகாரப்பூர்வ டுவிட்டர், பேஸ்புக், யு டியூப் தளங்கள் மூலம் அறிவிக்கப்பட்டது.

மொத்தம் 23 பிரிவுகளின் கீழ் ஆஸ்கர் விருதிற்காக நாமினேட் செய்யப்பட்ட படங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருதிற்கு நாமினேட் செய்யப்பட்ட படங்களின் பட்டியலை லெஸ்லி ஜோர்டான் மற்றும் எல்லிஸ் ரோஸ் ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள்.

சிறந்த திரைப்படங்கள்

பெல்பாஸ்ட்
தி பவர் ஆஃப் தி டாக்
டூன்
டிரைவ் மை கார்
வெஸ்ட் சைடு ஸ்டோரி
டோன்ட் லுக் அப்
லைகோரைஸ் பீஸ்ஸா
கோடா
கிங் ரிச்சர்ட்
நைட்மேர் அல்லே போன்ற 10 திரைப்படங்கள் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

சிறந்த இயக்குநர்

கென்னத் பிரானாக் – பெல்ஃபாஸ்ட்
ரியூசுகே ஹமாகுச்சி – டிரைவ் மை கார்
பால் தாமஸ் ஆண்டர்சன் – லிகோரிஸ் பிட்ஸா
ஜேன் கேம்பியன் – தி பவர் ஆஃப் தி டாக்
ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் – வெஸ்ட் சைட் ஸ்டோரி

அனிமேஷன் திரைப்படங்கள்
ஆஸ்கர் நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்ற சிறந்த அனிமேஷன் திரைப்படங்கள் பிரிவில், என்கான்டோ, லுகா, ரயா தி லாஸ்ட் டிராகன், ஃப்லீ, தி மிட்செல் மெஷின்ஸ் உள்ளிட்ட 5 அனிமேஷன் திரைப்படங்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இதில், என்கான்டோ, லுகா, ரயா தி லாஸ்ட் டிராகன் உள்ளிட்ட திரைப்படங்கள் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் தமிழிலும் உள்ளன.

சிறந்த நடிகை

ஜெசிகா சஸ்டெய்ன் – தி ஐஸ் ஆஃப் டாமி ஃபே,
ஒலிவியா கோல்மேன் – தி லாஸ்ட் டாட்டர்,
பெனெலோப் க்ரூஸ் – பேரலல் மதர்ஸ்,
நிக்கோல் கிட்மேன் – பிஹிங் தி ரிக்கார்டோஸ்,
க்ரிஸ்டன் ஸ்டீவர்ட் – ஸ்பென்சர்ஸ் ஆகியோரின் பெயர் சிறந்த நடிகைக்கான பரிந்துரை பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

சிறந்த நடிகர்

ஜேவியர் பார்டெம் – பீயிங் தி ரிக்கார்டோஸ்
பெனடிக்ட் கம்பெர்பாட்ச் – தி பவர் ஆஃப் தி டாக்
ஆண்ட்ரூ கார்பீல்ட் – டிக், டிக் பூம்
வில் ஸ்மித் – கிங் ரிச்சர்ட்
டென்சல் வாஷிங்டன் – தி டிராஜெடி ஆஃப் மக்பத் போன்றவர்களில் பெயர் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சிறந்த துணை நடிகைகள்

ஜெஸ்ஸி பக்லி – தி லாஸ்ட் டாட்டர்
அரியானா டிபோஸ்- வெஸ்ட் சைட் ஸ்டோரி
ஜூடி டென்ச் – பெல்ஃபாஸ்ட்
கிர்ஸ்டன் டன்ஸ்ட்- தி பவர் ஆஃப் தி டாக்
ஆன்ஜானு எல்லிஸ் – கிங் ரிச்சர்ட்

சிறந்த துணை நடிகர்கள்

சியாரன் ஹிண்ட்ஸ் – பெல்ஃபாஸ்டில்
ராய் கோட்சூர் – கோடா
ஜெஸ்ஸி பிளெமன்ஸ் – தி பவர் ஆஃப் தி டாக்
ஜே.கே சிம்மன்ஸ் – பீயிங் தி ரிக்கார்டோஸ்
கோடி ஸ்மிட் மெக்பீ – தி பவர் ஆஃப் தி டாக்

சிறந்த சர்வதேச திரைப்படங்கள்

டிரைவ் மை கார் – ஜப்பான்,
ஃப்லீ – டென்மார்க்,
தி ஹேண்ட் ஆஃப் காட் – இத்தாலி,
லுனானா: எ யாக் இன் தி கிளாஸ்ரூம் – பூட்டான்,
தி வொர்ஸ் பர்சன் இன் தி வேர்ல்ட் – நார்வே

இதில் இந்த ஆண்டும் இந்திய படம் தேர்வாகவில்லை. கடைசியாக 2001ம் ஆண்டு வெளியான அமீர்கானின் லகான் படத்திற்கு பிறகு எந்தவொரு இந்திய திரைப்படமும் ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் தேர்வாகவில்லை. இந்தியா சார்பாக மதர் இந்தியா, சலாம் பாம்பே மற்றும் லகான் உள்ளிட்ட மூன்று படங்கள் மட்டுமே இதுவரை ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

சிறந்த ஆவணக்குறும்படம்

அடிபில்
லி மீ ஹோம்
தி குயின் பாஸ்கேட்பால்
த்ரி சாங் பாஃர் பென்ஜிர்
வென் தி வேர் புல்லீஸ் போன்ற 5ஆவணக் குறும்படங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *