• Wed. Nov 5th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

விருதுநகரில் மீனாட்சி அம்பிகை அருணாசல ஈஸ்வரர் கோவில் பிப்-9ல் கும்பாபிஷேகம்!

Byகாயத்ரி

Jan 23, 2022

விருதுநகர் மாவட்டம், ஜக்கம்மாள்புரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பரி பூரண நாயகி சமேத கைலாசநாதர் கோயிலில்,  மீனாட்சி அம்பிகா சமேத அருணாசல ஈஸ்வரர் மற்றும் விக்ன விநாயகர், நடராஜர், சுப்பிரமணியர், நந்திகேசுவரர், கால பைரவர், நவக்கிரகம் ஆகிய பரிவார மூர்த்திகளுக்கும் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

நிகழும் மங்களகரமான தை மாதம் 27ஆம் நாள் (09-02-2022) புதன்கிழமை கிருத்திகை நட்சத்திரமும், வளர்பிறை அமிர்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 9.00 மணி முதல் 10.00 மணிக்குள் மீன லக்கனத்தில் ஸ்ரீ பரி பூரண நாயகி சமேத கைலாசநாதர் என்ற மீனாட்சி அம்பிகா சமேத அருணாசல ஈஸ்வரர் மற்றும் மூர்த்திகளுக்கும் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் பக்த கோடிகளும், ஆன்மீகப் பெரியவர்களும், பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு கடவுளின் அருளை பெறலாம்.

நிகழ்ச்சி நிரலில் 08-02-2022 செவ்வாய் கிழமை அன்று அதிகாலை 5.30 மணிக்கு மேல் மங்கள வாத்தியங்களின் இசை முழங்க கணபதி ஹோமம், மகா லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், விக்னேஷ்வர பூஜைகள் நடைபெறும். பின் மாலை வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம், யாகசாலைப் பிரவேசம், உள்ளிட்டவை நடைபெற உள்ளன.. இரவு எந்திர ஸ்தாபனம், அஷ்ட பந்தன மருந்து சாத்துதல் நடைபெறும். மறுநாள் கும்பாபிஷேக தினமான புதன் அன்று காலை 6.00 மணிக்கு பஞ்ச சுத்த ஹோமம், மூல மந்திர ஹோமம், கடம் புறப்பாடுக்கு பின் மகா கும்பாபிஷேகம் நடைபெறும்..  தொடர்ந்து மூலவருக்கு அலங்கார தீபாராதனை முடிந்த பின் அருட் பிரசாதம் வழங்கப்படும். பின் காலை 10.00 மணிக்கு மேல் சமபந்தி விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்விழாவின் முக்கிய பொறுப்புகளுக்கான திருப்பணி விழாக்குழுவினர்..

• பிச்சைக்கனி சுவாமிகள்
• தா.பாக்கியராஜ்
• மூர்த்தி
• சீனிவாசன்
• பிச்சைக்கனி, ஆகியோர்