• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பட்ஜெட் கூட்டத்தொடர் தேதி அறிவிப்பு!..

Byகாயத்ரி

Jan 14, 2022

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் தேதி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. வரும் 31-ம் தேதி இந்த கூட்டத்தொடர் தொடங்குகிறது. இது இந்த ஆண்டின் முதலாவது கூட்டத்தொடர் ஆகும்.

பிப்ரவரி 1-ம் தேதி இந்த நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசுகிறார். பொது பட்ஜெட்டிலேயே ரெயில்வே பட்ஜெட்டும் அடங்கி இருக்கும்.


பட்ஜெட் கூட்டதொடர் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக ஜனவரி 31 முதல் பிப்ரவரி 11ம் தேதி வரை நடைபெறுகிறது. இரண்டாம் கட்டமாக மார்ச் 14 முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது.ஏப்ரல் 8-ம் தேதிவரை மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.