• Wed. Oct 14th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

போதைப் பழக்க விழிப்புணர்வு கருத்தரங்கம்..,

Byமுகமதி

Oct 14, 2026

அரசு கல்வியியல் கல்லூரி புதுக்கோட்டை நாட்டு நலப் பணித் திட்டம் புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் புதுகை வெற்றி ரோட்டரி சங்கம் இணைந்து ரோட்டரி மாவட்டம் 3000தின் சிறப்புத் திட்டமான போதைப் பழக்க விழிப்புணர்வுக் கருத்தரங்கம் அரசு கல்வியியல் கல்லூரியில் முதல்வர் முனைவர் S.கணேசன் தலைமையில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

முன்னதாக வருகை தந்த அனைவரையும் இணைப் பேராசிரியர் முனைவர் T.ரவிச்சந்திரன் வரவேற்றார். நிகழ்ச்சியில் புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர் S.அப்துல் ரகுமான் ஏற்புரை வழங்கினார் புதுகை வெற்றி ரோட்டரி சங்கத் தலைவர் A.சோமசுந்தரம் ஓகே பிரார்த்தனை வாசித்தார். நிகழ்ச்சிகள் பொருளாளர் கண.மோகன் ராஜா, மேனாள் மண்டல ஒருங்கிணைப்பாளர் P.திருச்செல்வம் மேனாள் துணை ஆளுநர் T.பாபுஜான், புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்க வருங்காலத் தலைவர் K.ஓம்ராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

நிகழ்ச்சியில் ரோட்டரி மாவட்ட இன்ட்ராக்ட் ஒருங்கிணைப்பாளர் விக்னேஷ் சிவனேசன், அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் முனைவர் டாக்டர் K.சரவணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு போதைப் பழக்க வழக்கத்தால் ஏற்படும் தீமைகளைப் பற்றி விளக்கிக் கூறினார்கள்.

நிகழ்ச்சிகள் மேனாள் தலைவர் S.பார்த்திபன் மேனாள் செயலாளர் R.சங்கர், R.பாலமுருகன், மூத்த வழக்கறிஞர் K.குஞ்சிதபாதம் J.ஜான் கென்னடி கார்த்திக், சையது இப்ராஹீம், புதுகை வெற்றி ரோட்டரி சங்க செயலாளர் SM.அண்ணாமலை, ஜகுபர் அலி மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் போதை பழக்க வழக்கங்களைப் பற்றிய விழிப்புணர்வு குறும்படம் மாணவர்கள் செய்திருந்தனர். போதை விழிப்புணர்வு குறித்த உறுதிமொழி மாணவர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டனர் நிறைவாக சங்க செயலாளர் K.மணிகண்டன் நன்றி கூறினார்.