• Sun. Oct 11th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

கார்த்திகை தீபம் திருப்பரங்குன்றம் மலை மேல் நீதிமன்ற உத்தரவு படி ஏற்ற வேண்டும் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்..,

ByS. SRIDHAR

Oct 11, 2026

நவம்பர 24 வரக்கூடிய கார்த்திகை தீபம் அன்று திருப்பரங்குன்றத்தில் மலைமேல் உச்சியில் உள்ள தீபத்துனில் நீதிமன்ற உத்தரவு படி தீபம் ஏற்ற வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை அண்ணாசிலை பகுதியில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட தலைவர் திரு. கற்பக வடிவேல் ஜி தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட பொது செயலாளர் திரு. வெங்கடேஷ் ஜி, மாவட்ட செயலாளர்கள் திரு. கருப்பையா ஜி, திரு. பெரியசாமி ஜி, நாகராஜன் ஜி மற்றும் மாவட்ட துணை தலைவர்கள் திரு. தனசேகர் ஜி, திரு. செந்தில் ஜி மற்றும் நகர், ஒன்றிய பொறுப்பாளர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். திருச்சி கோட்ட செயலாளர் திரு. சிவாஜி சிறப்புரை ஆற்றினர்.