• Sun. Oct 4th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

குடிநீர் விநியோகத்தை பாதிக்கும் வகையில் மின் மோட்டார் பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை..,

ByKalamegam Viswanathan

Aug 20, 2026

மதுரை யானைமலை ஒத்தக்கடை, சுதந்திர நகர் பகுதிகளில் காவிரி குடிநீர் வீடுகள் மற்றும் தெருக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், சிலர் அதிக உறிஞ்சும் திறன் கொண்ட மின் மோட்டார்களை சட்டவிரோதமாக பயன்படுத்தி குடிநீரை உறிஞ்சி, மேல்நிலைத் தொட்டிகளில் சேமித்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதனால் குடிநீர் அழுத்தம் குறைந்து, குறிப்பாக மேடான பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு முறையாக குடிநீர் சென்றடையாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனவே, யானைமலை ஒத்தக்கடை மற்றும் சுதந்திர நகர் 1, 2 மற்றும் 3-வது தெரு பகுதிகளில் குடிநீர் விநியோகத்தை ஆய்வு செய்து, அதிக அழுத்த திறன் கொண்ட மின் மோட்டார் மூலம் குடிநீரை உறிஞ்சுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், தண்ணீர் கிடைக்காத பகுதிகளுக்கு சீரான குடிநீர் விநியோகம் கிடைப்பதை உறுதி செய்ய மண்டல அதிகாரி செல்லப்பாண்டியன், ஒத்தக்கடை ஊராட்சி செயலர் மணிகண்டன் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.