• Sun. Oct 4th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

தமிழ்ப் பணிகளைப் பாராட்டி சத்தியமூர்த்திக்குவி.ஜி.பி நற்றமிழ் விருது..,

ByKalamegam Viswanathan

Aug 20, 2026

வி.ஜி.பி.உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் அதன் நிறுவனர் தலைவர் செவாலியர், டாக்டர் வி. ஜி.சந்தோசம் அவர்களின் 90 வது பிறந்தநாள் விழாவினையொட்டி, தமிழகத்தில் உள்ள பல்வேறு தமிழறிஞர்களுக்கும் கல்வியாளர்களுக்கும் தமிழறிஞர்களின் தமிழ்ப் பணிகளையும் தமிழ் இலக்கியப் பணிகளையும் சமூகப் பணிகளையும் பாராட்டி விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

இவ்விழாவில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியல்துறைத் தலைவரும் தமிழ்ப் பண்பாட்டு மரபுச்செல்வஙகள் நடுவத்தின் இயக்குநர் பொறுப்பாளர் மற்றும் திருக்குறள் இருக்கையின் இயக்குநர் பொறுப்பாளருமான, தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருதுபெற்ற முனைவர் போ.சத்தியமூர்தியின் தமிழ்த் தொண்டினையும் தமிழ் இலக்கியப் பணிகளையும் பாராட்டி வி.ஜி.பி.நற்றமிழ் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

இவ்விருதினை வி.ஜி.பி.உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும் பிறந்தநாள் விழா நாயகருமான டாக்டர் வி. ஜி .சந்தோசம் அவர்கள் திருக்கரங்களால் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. விருது பெற்ற தமிழ்ப் பேராசிரியரை ஆசிரியர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைபினர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.