• Sun. Oct 4th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

காலை உணவு திட்டத்தை கண்காணிக்க ஆசிரியர்கள் காலை 7.00 மணிக்கு வருகை தர வேண்டும் என்ற அறிவிப்பை திரும்ப பெற அறிக்கை..,

ByKalamegam Viswanathan

Oct 4, 2026

ஏற்கனவே 2022 செப்டம்பர் மாதம் மாணவர்களின் பெற்றோர்கள் ஏழ்மை நிலையை அறிந்து தினம் காலையிலேயே கூலி வேலைக்கு சென்றுவிடுவதால் சமைக்க முடிவதில்லை இதனால் மாணவகள் காலையில் சாப்பிடாமல் பள்ளிக்கு சோர்வாக வருகிறார்கள்.

இதனால் படிப்பில் கவனம் செலுத்தாத நிலை ஏற்படும் உள்வாங்கி ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு காலை உணவு திட்டத்தை கொண்டு வந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் முதல் 6ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை நீட்டிக்கப்பட்டு செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு ச.ஜோசப் விஜய் அவர்கள் தொடங்கி வைத்தார். தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.

காலை உணவு திட்டத்தை கண்காணிக்க தினம் தோறும் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் காலையில் 7.00 மணிக்கே பள்ளிக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது ஆசிரியர்கள் மத்தியில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது , ஏற்கனவே ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை சிறப்பான முறையிலேயே நடைப்பெற்று வருகிறது. ஆசிரியர் ஒருவர் 8.15 மணிக்கு மாணவர்களுக்கு உணவு அளிப்பதை கண்காணித்து தானும் மாணவர்களுடன் காலை உணவை சாப்பிடுகிறார்கள்.

தற்போது எட்டாம் வகுப்பு வரை நீடிக்கப்பட்ட நிலையில் ஆசிரியர் ஒருவர் காலை 7.00 மணிக்கே பள்ளிக்கு வருகைத்தந்து கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது , பல ஆசிரியர்கள் 40 , 50 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து பணிக்கு வருகிறார்கள் காலை 7.00 மணிக்கே பள்ளிக்கு வருவது என்பது மிகவும் சிரமாக இருக்கும் பெரும்பாலான தொடக்கப்பள்ளிகளில் ஓர் ஆசியர் மற்றும் இரு ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.

இவர்கள் தினந்தோறும் 7.00 மணிக்கே பள்ளிக்கு வர வேண்டிய நிலை இதனால் அவர்கள் வீட்டில் இருந்து ஐந்து மணிக்கு கிளம்பினால் தான் பள்ளிக்கு 7.00 மணிக்கு வர இயலும். இந்த சிரமத்தை கருத்தில் கொண்டு கண்காணிப்பு பணிக்கு ஆசிரியர்கள் காலை 8.15 மணிக்கு வர அனுமதித்து உதவிட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு ராஜ்மோகன் அவர்களையும் மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறை செயலாளர் இயக்குநர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களை பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.