தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா பகுதிகளில் நேற்று நியாய விலை கடைகளை கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா ஆய்வு மேற்கொண்டு ரேஷன் பொருள்கள் தரமான முறையில் எடைகள் போடப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வு சம்பந்தமாக தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பாக அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநில பொருளாளர் பொன் அமைதி கூறியதாவது கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா அவர்கள் ஆய்வு என்ற பெயரில் த. வெ.க கட்சியினரை அழைத்துக் கொண்டு உத்தமபாளையம் தாலுகா பகுதியில் உள்ள நியாய விலை கடைகளுக்கு ஆய்வு சென்று பணியாளர்களை எடை குறைவாக இருக்கிறது என்று அடிக்க பாய்ந்ததாகவும் பெண் பணியாளர்களிடம் ஒருமையிலும் தரக்குறைவாக பேசியதாகவும் மிகவும் அநாகரீகமாக நடந்து கொள்கிறார் எனவும் இந்த ஆய்வுக்கு வருபவர் துறை சார்ந்த அதிகாரிகளுடன் வருவது தான் வழக்கமான முறை இவர் கட்சிக்காரர்களை அழைத்து வருவது ரீல்ஸ் போடவா என இந்நிகழ்வில் கேள்வி எழுப்புகின்றனர்?

இதனை கண்டிக்கும் விதமாக அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மூன்று முக்கிய தீர்மானங்கள் போடப்பட்டுள்ளது. கம்பம் நியாய விலை கடையில் பணியாற்றிய மாற்றுத்திறனாளி பணியாளர் மாசானம் அவர்களை அடிக்க கை ஓங்கினார் அதற்கு எம்.எல்.ஏ அவர்கள் வருத்தம் தெரிவிக்க வேண்டும். யார் இவருக்கு அடிக்க கை ஓங்க விகாரம் அதிகாரம் கொடுத்தது என கேள்வி எழுப்புகின்றனர்? மேலும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் பொட்டலம் முறையை அமல்படுத்த வேண்டும் என

பத்தாண்டுகளுக்கு மேலாக கோரிக்கைகளை வலியுறுத்தி வருவது அனைவரும் அறிந்த ஒன்றே இம்முறை எந்தவித தாமதமும் இன்றி பட்ஜெட்தாக்கப்பட்டுள்ள நிலையில் உடனடியாக பொட்டலம் முறைக்கு மாற்றம் செய்தால் மட்டுமே இது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்றும் பணியாளர் மாசானம் மீது ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயர் தற்காலிக பணிநீக்கம் செய்தால் நாளை மாநிலம் தழுவிய கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.வருகிற சனி அல்லது ஞாயிற்றுக்கிழமை கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா அவர்களின் வீட்டை முற்றுகையிட்டு கண்டன ஆரப்போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர் இந்த கூட்டத்தில் தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.





