• Mon. Aug 10th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

சோழவந்தானில் மழை நீர் வடிகால் வசதி ஏற்படுத்த பொதுமக்கள் கோரிக்கை..,

ByKalamegam Viswanathan

Aug 10, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் மழை நீர் வடிகால் வசதி ஏற்படுத்த பொதுமக்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். சோழவந்தான் பகுதியில் உள்ள பசும்பொன் நகர் வைத்தியநாதபுரம் சங்கங்கோட்டை பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை காலங்களில் மழை நீர் தேங்கி சேரும் சகதியுமாக மாறிவிடுகிறது.

பல்வேறு பகுதிகளில் கழிவு நீர் கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படாததால் மழை நீர் கழிவு நீர் கால்வாய் மூலம் சாலைகளில் தேங்கி கிடக்கிறது. இதன் மூலம் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. நேற்று மாலை அரை மணி நேரம் பெய்த மழை காரணமாக சோழவந்தான் சங்கங்கோட்டை பூக்குழி திடல் அரசு மருத்துவமனை பகுதி வைத்தியநாதபுரம் தேனூர் பாசன கால்வாய் பசும்பொன் நகர் வாடிப்பட்டி ரோடு பகுதி பேட்டை சந்தன மாரியம்மன் கோவில் இரும்பாடி கருப்பட்டி ரோடு காவல் நிலையம் அருகில் உள்ள ராயல் கார்டன் பின்புறம் குடியிருப்பு பகுதிகள் ஆகிய பகுதிகளில் உள்ள கழிவுநீர் கால்வாய்களில் வடிகால் வசதி இல்லாததால் மழை நீருடன் கழிவு நீர் கலந்து தெருக்களில் தேங்கி கிடக்கிறது.

இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். ஆகையால் சோழவந்தான் நகர் பகுதி முழுவதும் கழிவுநீரை வெளியேற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மழை நீர் தேங்காதவாறு மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.