திண்டுக்கல் அருகே நார் குடோனில் தீ விபத்து ஏற்பட்டு பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசம் அடைந்தன. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உலுப்பகுடி தென்னை நார் குடோன் திடீரென தீப்பற்றி எரிந்தது நார் கழிவுகள் அதிகம் இருந்ததால், மளமளவென தீ குடோன் முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நத்தம் தீயணைப்புத்துறையினர் தண்ணீரைப் அடித்து தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீயைக் கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. இருப்பினும், தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் கடுமையாகப் போராடி தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.





