• Wed. Jun 24th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல் அருகே கொலை வழக்கில் ஆறு பேருக்கு ஆயுள்..,

ByS.Ariyanayagam

Jun 24, 2026

அம்மையநாயக்கனூர் அருகே கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேருக்கும் ஆயுள் தண்டனை, தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர்,மாவூர் டேம் சடையாண்டி கோவில் அருகே கடந்த 2019-ம் ஆண்டு ராஜேந்திரன் என்பவரை கொலை செய்த வழக்கில் பால்பாண்டி, சேதுபதி, மருதுபாண்டி, ஆனந்தன், நாச்சியப்பன், சோனைமுத்து ஆகிய 7 பேரை அம்மையநாயக்கனூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் அம்மையநாயக்கனூர் காவல் நிலைய ஆய்வாளர் சாகுல் ஹமீது தலைமையிலான போலீசார் அரசு வழக்கறிஞர் சூசைராபர்ட் ஆகியோரின் முயற்சியால் இன்று கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி அவர்கள் 6 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.