• Fri. Aug 7th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

கொடைக்கானலில் தரம் மற்ற சாலையால் பொதுமக்கள் அவதி..,

ByS.Ariyanayagam

Jun 22, 2026

கொடைக்கானலில் தரம் மற்ற சாலையால் பொதுமக்கள் அவதிப்படுவதாக புகார் அளித்துள்ளது.

கொடைக்கானல் கீழ் மலை KC பட்டியிலிருந்து பாச்சலூர் செல்லும் சாலையில் மூன்று புதிய பாலங்கள் அமைக்கப்பட்டு அப்பகுதியில் சட்டமன்றத் தேர்தல் முடிந்து ஆங்காங்கே தார் சாலைகள் மற்றும் விபத்தை ஏற்படுத்தாத வகையில் சிமெண்ட் தடுப்பு சுவர்களும் அமைக்கப்பட்டு உள்ளது

தரமற்ற தடுப்புச் சுவர் மற்றும் தரமற்ற தார் சாலை அமைக்கப்பட்டதால் தற்போது சாலை அரிசி போல் பிரிந்து வருகிறது. மேலும் கல்வெட்டுகளும் வெடிப்பு விழுந்து மக்களின் வரிப்பணத்தை காலி செய்து வருகிறது.

நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அலட்சியமாக தொடர்ந்து பணி செய்து வருவதால் பொதுமக்கள் பாதிப்படைந்து வருகின்றனர்.

விபத்தை ஏற்படுத்தும் அளவிற்கு சாலை உள்ளது பாலம் அமைக்கப்பட்ட அளவிற்கு சாலை அமைக்காமல் குண்டு குழியுமாக இருப்பதால் சனி ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக அளவு இருசக்கர நான்கு சக்கர வாகன ஓட்டிகள் விபத்தை சந்திப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.