• Thu. Oct 1st, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

அமைச்சர் ஜி என் எஸ் ராஜசேகரன் பங்கேற்ற யோகா பயிற்சி..,

ByM.I.MOHAMMED FAROOK

Jun 21, 2026

திருநள்ளாற்றில் யோகா தினம் அமைச்சர் ஜி என் எஸ் ராஜசேகரன் பங்கேற்று யோகா பயிற்சிகளை மேற்கொண்டார்

        12 வது உலக யோகா தினத்தை முன்னிட்டு  பிரதமர் நரேந்திர மோடியின்  வழிகாட்டுதலின்படியும் புதுச்சேரி மாநில அமைச்சர் ஜி.என்.எஸ்.ராஜசேகரன்  அறிவுறுத்தலின்படியும் தொகுதி தலைவர் டி.பாலமுருகன்  மேற்பார்வையில் திருநள்ளாறு ஆன்மீக பூங்காவில் யோகா பயிற்சி நடைபெற்றது. இதில் புதுச்சேரி மாநில அமைச்சர் ஜி.என்.எஸ். ராஜசேகரன் கலந்துகொண்டுயோகா பயிற்சிகளை மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில்திருநள்ளாறு தொகுதி பாஜக பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள், மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் யோகா பயிற்சி ஒவ்வொருவருக்கும் அவசியமானது என்றும் இதன் முக்கியத்துவம் அறிந்து ஒவ்வொருவரும் தினசரி யோகா பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார். நிகழ்ச்சியின் இறுதியில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு ஊட்டச்சத்து உணவுகளை வழங்கினார்.