• Sun. Aug 23rd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

காரைக்கால் பேரளம் ரயில் தடத்தில் பயணிகள் ரயில் இயக்கம்..,

ByM.I.MOHAMMED FAROOK

May 20, 2026
 காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு பேரளம் வழியாக இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில் சேவை பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டது. 

இந்நிலையில் இந்த வழித்தடத்தில் பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காரைக்கால் பேரளம் ரயில் பாதை விரிவுபடுத்தப்பட்டு புதிய அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு சோதனை ஓட்டம் செய்து தரம் சோதிக்கப்பட்டு சரக்கு ரயில் இயக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காரைக்கால் பேரளம் வழியாக மயிலாடுதுறை செல்லும் பயணிகள் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. 

இதனை வரவேற்கும் வகையில் பல்வேறு தரப்பினரும் ஆங்காங்கே இனிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக காரைக்கால் கோவில்பத்து பகுதியில் பாஜக மாவட்ட தலைவர் முருகதாஸ் தலைமையில் ஏராளமான பாஜகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் பயணிகள் ரயில் சேவையை வரவேற்றனர். இந்நிகழ்ச்சியில் மாநில செய்தி தொடர்பாளர் அருள்முருகன் உள்ளிட்ட ஏராளமான பாஜகவினர் கலந்து கொண்டனர்.