புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த சுகுமார் – குணவதி தம்பதிகளின் மகன் ஹர்ஷித்குமார் இலங்கையில் கடந்த 16ஆம் தேதி நடைபெற்ற ஆசிய அளவிலான 12 வயது உட்பட்ட கராத்தே போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று உள்ளார்.

இந்த 12 வயதிற்கு உட்பட்ட ஆசிய அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் சிங்கப்பூர், மலேசியா, இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து 42 மாணவர்கள் பங்கேற்றதில் காரைக்கால் பகுதியை சேர்ந்த மாணவன் ஹர்ஷித்குமார் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று முதல் பரிசு பெற்றுள்ளார்.

இந்த நிலையில் இன்று கருத்தை போட்டியில் இலங்கையில் ஆசிய அளவில் நடைபெற்ற கரத்தை போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்களை பெற்ற மாணவன் ஹர்ஷித்குமார் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும் இதே போன்று பல்வேறு நாடுகளில் நடைபெறும் கரத்தை போட்டியில் பங்கேற்று வெற்றி பெற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் வாழ்த்து தெரிவித்தார்.




