திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா பித்தளை பட்டியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தும்பிக்கை ஆழ்வார் ,ஸ்ரீதேவி ,பூமாதேவி சமயத வெங்கடாசல பெருமாள், பக்த ஆஞ்சநேயர், கருட கம்பாள்வார், ஸ்ரீபொம்முத்தாயம்மாள் ஆலய கும்பாபிசேகத்தை முன்னிட்டு, 21.04.26 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காப்பு கட்டு நிகழ்ச்சியானது நடைபெற்றது.

தொடர்ந்து 26 ஆம் தேதி குடகு நதியில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல் நிகழ்ச்சியில் கரூர், திருச்செந்தூர், கொடுமுடி, காசி, திருப்பரங்குன்றம், திருச்சி உட்பட பல ஊர்களிலிருந்து புனித நீர் எடுத்துவரப்பட்டது. அதனை தொடர்ந்து முளைப்பாரி அழைத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 27.04.2026, திங்கட்கிழமை அன்று இரண்டு கால பூஜை, கன்னிகா பூஜை, யாத்ரா தானம் நடைபெற்றது. காலை 10 மணியளவில் யாக வேள்வி பூஜையில் வைக்கப்பட்டிருந்த புனித தீர்த்தங்களை பட்டாச்சாரியார்கள் பாலாஜி,துளசி, நரசிங்க பெருமாள் தலைமையில் தலையில் சுமந்தவாறு கோயிலை சுற்றி வலம் வந்து கோபுரத்தில் உச்சிக்கு வந்தனர்.

கருடன் வட்டமிட கோபுல கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாசேகத்தை நிறைவு செய்தனர். கும்பாபிசேக விழாவிற்கு திமுக மாநில துணை பொதுச் செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி அவர்கள் வந்தபோது கோவில் கமிட்டியைச் சேர்ந்த நிர்வாகிகள் பொ.ராமலிங்கம், அ.பழனிச்சாமி, ஆர்.கோபாலகிருஷ்ணன், கன்னிமாநூத்து பி.ஜெயபாலன் தலைமையில் மேளதாளம் முழங்க பரிவட்டம் கட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன் பின்னர் கோவில் உள்ளே சென்று, பெருமாளை தரிசனம் செய்த அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பாக ராஜமாலை அணிவித்து பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தினார்கள்.

நிகழ்ச்சியின்போது ஆத்தூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் பிள்ளையார்நத்தம் முருகேசன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் இராஜகணேஷ், மாணவரணி அமைப்பாளர் அரவிந்தன், கிளைச் செயலாளர் கோவிந்தராஜ், ஒன்றிய வர்த்தகர் அணி அமைப்பாளர் ராமகிருஷ்ணன், கலிக்கம்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் கோமதி செல்வகுமார், முன்னாள் ஒன்றிய பொருளாளர் கலிக்கம்படடி லெட்சுமணன், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் வசந்தகுமார், செல்வி காங்கேயன், பிள்ளையார்நத்தம் கிளைச் செயலாளர் அருண்பாண்டியன், பித்தளைபட்டி திமுக பொறுப்பாளர்கள் பார்த்தசாரதி, மனோஜ், விஜயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கும்பாபிசேக விழாவில் திண்டுக்கல் மாவட்டத்தை சுற்றியுள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவில் கமிட்டியின் சார்பாக மாபெரும் அன்னதானம் நடைபெற்றது.




