• Mon. Apr 20th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல் நகரின் குடி தண்ணீர் பிரச்சனையை தீர்ப்பேன் -ஐ.பி.செந்தில்குமார்..,

திண்டுக்கல் இராணிமங்கம்மாள்; பகுதிக்கு வந்த திமுக வேட்பாளர் ஐ.பி.செந்தில்குமாருக்கு பூரண கும்ப மரியாதையுடன் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். திண்டுக்கல் நகரின் குடி தண்ணீர் பிரச்சனையை தீர்ப்பேன் என்று தேர்தல் பிரச்சாரத்தில் ஐ.பி.செந்தில்குமார் பொதுமக்களிடம் உறுதி அளித்தார்.

திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி திமுக வெற்றி வேட்பாளர் ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு வீதி வீதியாக சென்று பொதுமக்களை சந்தித்து திமுக அரசின் சாதனைகளை சொல்லியும், தனக்கு வாக்களித்தால் திண்டுக்கல் தொகுதிக்கு செய்யும் நலத்திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்து வருகிறார்.
சுசிலா மருத்துவமனை அருகில் தனது பிரச்சாரத்தை தொடங்கிய வேட்பாளர் ஐ.பி.செந்தில்;குமார் எஸ்.கே.சி. திருமண மண்டபம், ஆர்.எம்.காலனி 8 மற்றும் 9-வது குறுக்குத்தெரு, மெயின்ரோடு, சத்யா காலனி, எம்.வி.எம். நகர், காளிமுத்து பிள்ளை சந்து, நாயக்கர் புதுத்தெரு உட்பட 12-ககும் மேற்பட்ட பகுதிகளுககு சென்று பொதுமக்களை சந்தித்து, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

இராணிமங்கம்மாள் காலனிக்கு வந்த ஐ.பி.செந்தில்குமாருக்கு அப்பகுதி பெண்கள் ஆரத்தி மற்றும் பூரண கும்பமரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். பொதுமக்கள் மத்தியில் பேசிய ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் நகரின் தலையாய பிரச்சனையான குடி தண்ணீர் பிரச்சனையை தீர்ப்பேன் என்றதுடன் வைகை அணையிலிருந்து குழாய்மூலம் குடி தண்ணீர் கொண்டுவந்து திண்டுக்கல் நகர மக்களுக்கு விநியோகம் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தேர்தல் முடிந்து திராவிட மாடல் ஆட்சிய நாயகன் கழகத்தலைவர் மு.க.ஸ்டாடலின் அவர்களின் ஆட்சி அமைந்தவுடன் அதற்கான பணிகள் தொடங்கப்படும் என்றார்.

அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மகிழச்சியில் கைதட்டி ஆரவாரம் செய்தனர். உங்களின் சகோதரன், உங்கள் வீட்டுப்பிள்ளை எனக்கு உதசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச்செய்தால் 24 மணி நேரமும் மக்களின் சேவுகனாக இருந்து பணியாற்ற தயாராக உள்ளேன் என்றார். தேர்தல் பிரச்சாரதின்போது திண்டுக்கல், காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவர் துரை மணிகண்டன், மதிமுக மாவட்ட செயலாளர் செல்வராகவன் தேமுதிக மாவட்ட செயலாளர் மாதவன் சிபிஎம் கட்சியைச் சேர்ந்த அரபு முகமது சரத் சிபிஐ சேர்ந்த மணி,விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநகர மாவட்ட செயலாளர் மைதீன் பாவா, எஸ்.டி.பி.ஐ அபுதாஹிர் மற்றும் மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி நிர்வாகிகள் திண்டுக்கல் மாநகர தி.மு.க. செயலாளர் ராஜப்பா, மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் பிலால் உசேன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் இல.கண்ணன், இலக்கிய அணி அமைப்பாளர் முருகானந்தம், பொதுக்குழு உறுப்பினர்கள் அக்பர், கலைராஜன், மாநகர பொருளாளர் மீடியா சரவணன், பகுதி செயலாளர்கள் சூசைராபர்ட், ராஜேந்திரகுமார், பஜ்ருல்ஹக், சந்தோஷ் முத்து, வார்டு செயலாளர் கண்ணன்,; உட்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.