• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

வடமதுரை அருகே ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள வடமதுரை ரயில் நிலையத்திற்கு அருகில் சென்னையில் இருந்து மதுரை மார்க்கம் செல்லும் ரயில்வே தண்டவாள பாதையில் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்த சுமார் 30 முதல் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் பிரேதத்தை கைப்பற்றி திண்டுக்கல் இருப்பு பாதை காவல் நிலைய குற்ற எண் 17/25 பதிவு செய்யப்பட்டு வழக்கு புலன் விசாரணையில் இருந்து வருகிறது. மேற்கண்ட நபரை பற்றி தகவல் ஏதேனும் தெரிந்தால் திண்டுக்கல் இருப்பு பாதை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

தொலைபேசி எண்கள்.
உதவி ஆய்வாளர் – 8122321132
திண்டுக்கல் இருப்பு பாதை தொலைபேசி எண்கள் – 9498139986

  1. நிறம் – மாநிறம்,
    உயரம் – சுமார் 51/2 அடி
    உடைகள் :
    1.பிரவுன் கலர் முழுக்கை சட்டை ப்ளூ கலரில் கட்டம் போட்ட கோடு 2.வெள்ளை கலர் வேஷ்டி,
    3) கருப்பு கலர் அடிடாஸ் டவுசர் மாடல் ஜட்டி.
    4) சிறப்பு அடையாளம் – சுன்னத் செய்யப்பட்டுள்ளது.