• Thu. Apr 9th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

திமுக வேட்பாளர் வீரா எஸ்.டி.சாமிநாதன் பெருமிதம்..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வீரா எஸ்.டி.சாமிநாதன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:
திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் என்னை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட எனக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார்கள்.

திமுக மாநில துணைப் பொதுச் செயலாளரரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கள் துறை அமைச்சருமான அர.சக்கரபாணி ஆகியோரின் பரிந்துரையின் படி எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு தற்போது கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறேன். செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் தானாக முன்வந்து எழுச்சியோடு என்னை வரவேற்று வருகின்றனர்.

கடந்த திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களான மகளிர் உரிமைத்தொகை, காலை உணவு திட்டம், மகளிர் உரிமைத்தொகை மாதம் ரூ 1000 வழங்கும் திட்டம், ரேஷன் பொருட்களை வீடு தேடி கொண்டு சேர்க்கும் பணி, முதியோர் உதவித்தொகை, கல்லூரி மாணவர்கள் திட்டத்தின் கீழ் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் அனைத்து குடும்பத்தினரும் பயன்பெற்றனர் என்பதால் குறிப்பாக பெண்கள் கூட்டம் கூட்டமாக வந்து என்னை வரவேற்கிறார்கள்.
பல தேர்தல்களை நான் பார்த்துள்ளேன் ஆனால் இந்த முறை எப்போதும் இல்லாத அளவிற்கு பொதுமக்களிடம் மிகப்பெரிய எழுச்சி பெற்றுள்ளது.

நான் தனிப்பட்ட முறையில் வேடசந்தூர் தொகுதி முழுவதும் மருத்துவ முகாம்கள்நடத்தி பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் மற்றும் பள்ளி கல்லூரியில் படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கியும், தொகுதி முழுவதும் மரக்கன்றுகளை நட்டு வைத்து பசுமை பூமியாக மாற்றுவதற்கும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளேன்.

இந்த எனது சேவைகள் அனைத்து தரப்பு மக்களிடம் என்னை பிரதிபலித்துள்ளது.
திமுக அறிவிக்கும் தேர்தல் வாக்குறுதிகளை 100 சதவீதம் பொதுமக்கள் நம்புகிறார்கள். சொல்வதை செய்வோம் செய்வதை சொல்வோம் என்ற வாக்கின்படி மற்ற கட்சி தேர்தல் வாக்குறுதியை பொதுமக்கள் யாரும் நம்பாமல் திமுக தேர்தல் வாக்குறுதியை நம்பியதால் குறிப்பாக அனைத்து தரப்பு மக்களிடம் திமுக அரசு மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது.

நான் பிரச்சாரத்திற்கு செல்லும்போது என்னை சந்தித்த ஒரு திரும்பி என்னிடம் வந்து திமுக தேர்தல் வாக்குறுதியின் படி ரூ 8 ஆயிரம் கூப்பனை வைத்து ஸ்மார்ட் டிவி வாங்க உள்ளோம் என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தார். வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி மிகவும் வறட்சியான பகுதியாகும் இதற்காக தொகுதி முழுவதும் அனைத்து வகையான மரக்கன்றுகளை நட்டு வைத்து முறையாக பராமரித்து பசுவை தொகுதியாக மாற்றுவேன்.

காவிரி மற்றும் அமராவதி சங்கமிக்கும் இடத்தில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வந்து தொகுதி முழுவதும் உள்ள 327 குளங்கள் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுப்பேன். தொகுதி முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவது மற்றும் அனைத்து விதமான உயிர் மருத்துவ சிகிச்சை பெரும் வகையில் அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சூழ்நிலைகளில் தரம் உயர்த்தப்பட்டு அனைத்து விதமான இலவச சிகிச்சைகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பேன்.
எனது விசிட்டிங் கார்டு தொகுதி மக்கள் அனைவருக்கும் வழங்கி உள்ளேன். நான் வெற்றி பெற்றவுடன் நான்கு மாதத்துக்கு ஒரு முறை தொகுதி முழுவதும் சென்று பொதுமக்களை நேரடியாக சென்று அவர்களின் கோரிக்கைகளை கேட்டு நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை இருப்பேன்.

வேடசந்தூர் தொகுதியில் பொறியியல் கல்லூரி மற்றும் தொழில் கல்லூரிகள் அரசின் சார்பில் அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன். வடமதுரையில் தீயணைப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வேடசந்தூரில் உரிய இடத்தை தேர்வு செய்து மின் மயானம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன்.

கடந்த திமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக தொகுதி முழுவதும் ஆயிரத்துக்கு மேற்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டு சீரடி உபயோகம் செய்யப்பட்டு வருகிறது. எரியோற்றில் மிகப்பெரிய விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. 14 ஆயிரத்துக்கு மேற்பட்ட புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது. பொது மக்களின் தேவையை கருத்தில் கொண்டு 73 புதிய ரேஷன் கடைகள் திறக்கப்பட்டுள்ளது. அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரச்சாரத்துக்கு செல்லும் ஊர்களில் மகளிர் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் தானாக முன்வந்து வரவேற்பதை பார்க்கும்போது தொடர்ந்து மீண்டும் திமுக ஆட்சி பொறுப்பேற்று முதலமைச்சராக இரண்டாவது முறையாக ஸ்டாலின் அமர்வது உறுதியாகி தெரிகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.