• Mon. May 25th, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

பெண் குழந்தைக்கு ஜெயலலிதா பெயர் சூட்டிய அதிமுக வேட்பாளர்..,

ByPrabhu Sekar

Apr 9, 2026

தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக போட்டியிடும் சிட்லபாக்கம் ராஜேந்திரன், தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இன்று மேற்கு தாம்பரம் பகுதிகளில் வாகன பிரச்சாரத்தை மேற்கொண்ட அவர், கடப்பேரி பண்ணாரி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார். அவருடன் முன்னாள் அமைச்சர் டி.கே.எம். சின்னையா, பாஜக மாவட்ட தலைவர் ரகுராமன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் கரிகாலன் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர், கூட்டணி கட்சித் தொண்டர்கள் புடை சூழ நடைபெற்ற வாகன பிரச்சாரத்தில் சிட்லபாக்கம் ராஜேந்திரனுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில், கடப்பேரி பகுதியைச் சேர்ந்த பாரத் – சந்தியா தம்பதியினருக்கு சமீபத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயரை சிட்லபாக்கம் ராஜேந்திரன் சூட்டினார். மேலும், குழந்தைக்கு அன்பு முத்தம் கொடுத்து வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்ததுடன், தேர்தல் பிரச்சாரத்தில் தனித்துவமான தருணமாக அமைந்தது.