• Sat. Oct 10th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

வாலிபரிடம் 25 பவுன் நகை ரூ1 லட்சம் பணத்தை அபகரித்த பெண் மீது வழக்குப்பதிவு..,

ByKalamegam Viswanathan

Mar 26, 2026

மதுரை அவனியாபுரத்தை மகேஷ்கண்ணா (வயது 35). இவர் மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது, நான் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன்.

கடந்த 2022ம் ஆண்டு சென்னையை சேர்ந்த புவனேஸ்வரி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அதன்பின் 2 பேரும் திருமணம் செய்து கொள்ளாமல் சென்னையில் ‘லிவிங் டு கெதரில்’ தனியாக வீடு எடுத்து வசித்து வந்தோம்.

அப்போது புவனேஸ்வரி வீட்டு பத்திரம், தன்னிடமிருந்து 25 பவுன் நகை ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு சென்று விட்டார்.

இந்த நிலையில் புவனேஸ்வரி மீண்டும் தன்னை செல்போனில் தொடர்பு கொண்டு கூடுதலாக பணம், நகைகள் கேட்டு ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தார்.

மேலும், கூலிப்படையை ஏவி என்னிடம் நகை பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தார்.

எனவே இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறி இருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என உத்தர விட்டது.

இதனை தொடர்ந்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவின் அடிப்படையில் புவனேஸ்வரி மீது அவனியாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.