• Tue. Jul 7th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கிய அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன்..,

ByKalamegam Viswanathan

Jul 7, 2026

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார்.

அதில், மாநகரில் சிறிய தெருக்கள் முதல் பெரிய சாலைகள் மற்றும் பாலங்கள் என பல இடங்களில் சாலைகள் மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது.

ஆரப்பாளையம் ரவுண்டானா உள்ளிட்ட பேவர் பிளாக் போடப்பட்ட சாலைகளில் வாகன அதிர்வுகளால் பல இடங்களில் விபத்துகள் ஏற்படுகிறது.

தொடர்ந்து மேடு பள்ளங்களில் பயனிக்கும் மக்களுக்கு முக்கியமாக இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் மூன்று சக்கர மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கு முதுகுத்தண்டு வடம் பாதிப்பு ஏற்படுகிறது.

தெற்கு வாசல், பழங்காநத்தம் உள்ளிட்ட பழைய மேம்பாலங்கள் மிகவும் சேதமடைந்து மக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. இவற்றுக்கு மாற்று பாலங்கள் அல்லது முழுமையான சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அனைத்து இடங்களிலும் தரமான முழுமையான தார் சாலைகள் அமைக்க வேண்டும்.

மேலும் முன்னாள் தலைமை செயலர் உயர்திரு இறையன்பு அவர்கள் அவரது பணிக்காலத்தில் அறிவுறுத்தியபடி சாலை போடும்போது அனைத்து தெருக்களிலும் பழைய சாலைகளை உடைத்து சாலை உயரம் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளவதோடு அனைத்து சாலைகளிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்த கட்டாய உத்தரவு பிறக்கப்பட வேண்டும்.

அனைத்து சாலைகளிலும் அரசின் வழிகாட்டுதல்படி சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மக்கள் நலன் கருதி மரக்கன்றுகள் வைப்பதை கட்டாயமாக்கி ஊக்கப்படுத்திட வேண்டும்.

இவ்வாறு தனது கோரிக்கை மனுவில் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் முதலமைச்சர் பிரிவுக்கும் வழிகாட்டி மணிகண்டன் மனு அனுப்பி உள்ளார்.